உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடை பயணம்

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடை பயணம்

குன்னுார்; மத்திய அரசின் வழிகாட்டல் படி, குன்னுார் பிராவிடென்ஸ் மகளிர் கல்லுாரி சார்பில். 5 கிராமங்களை தத்தெடுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில், பெள்ளட்டிமட்டம் கிராமத்தில், உன்னத் பாரத் அபியான், போதை பொருள் தடுப்பு சங்கம், நாட்டு நலப் பணி திட்டம், வரலாறு மற்றும் வணிகவியல் துறைகள் சார்பில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடைப்பயணம் இடம் பெற்றது. ஊர் தலைவர் உட்பட கிராம மக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் ஷானி ரஸ்கின், போதைப் பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பாளர் ரேவதி, வணிகவியல் துறை பேராசிரியர் சுவாதி ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை