உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வாகனம் மோதி யானை பலி

வாகனம் மோதி யானை பலி

பந்தலுார்:கேரளா மாநிலம் வயநாட்டில் கோழிக்கோடு -கொல்லேகால் தேசிய நெடுஞ்சாலையில் முத்தங்கா வனவிலங்கு சரணாலயத்துக்கு உட்பட்ட கல்லுார் பகுதி அமைந்துள்ளது.வனத்திற்கு மத்தியில் உள்ள சாலையில், கடந்த டிச., 4 ம் தேதி சாலையில் நடந்து சென்ற யானை மீது, சபரிமலைக்கு சென்று திரும்பிய வாகனம் மோதியதில் காயமடைந்தது.அதில், யானையின் கால், முதுகு பகுதிகளில் காயமடைந்தது. 3 டாக்டர்கள் கொண்ட குழுவினர் கும்கி யானைகள் உதவியுடன், சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், 30 வயதுடைய ஆண் யானை வனப்பகுதியில் உயிரிழந்தது. வனத்துறை விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை