மேலும் செய்திகள்
அழுகிய நிலையில் கிடந்த காட்டு யானை உடல்
14-Nov-2025
கூடலுார்: மசினகுடி, மாயார் அணை அருகே, தண்ணீர் குடிக்க சென்ற குட்டி யானை வாய்க்காலில் விழுந்து உயிரிழந்தது. முதுமலை, மசினகுடி வனக்கோட்டம், மாயார் அணைப் பகுதியில் நேற்று முன்தினம், மாலை வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள வாய்க் காலில் குட்டி யானை இறந்து கிடப்பது தெரிய வந்தது. வன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அப்பகுதியில், தாய் உட்பட மூன்று யானைகள் குட்டியை தேடுவதை வன ஊழியர்கள் பார்த்தனர். ஆக்ரோஷமாக இருந்த யானைகள் அவ் வழியாக சென்ற வனத்துறை வாகனத்தை தாக்க முயன்றது. வன ஊழியர்கள் சப்தமிட்டு யானைகளை விரட்டி உயிர் தப்பினர். இறந்த குட்டி யானையின் உடலை, மசினகுடி துணை இயக்குனர் (பொ) கணேசன், பறக்கும் படை உதவி வன பாதுகாவலர் கிருபாகரன், வனச்சரகர் ராஜன் நேற்று ஆய்வு செய்தனர். முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் பிரேத பரிசோதனை செய்தார்.
14-Nov-2025