மேலும் செய்திகள்
வீட்டை நோட்டமிட்ட கட்டை கொம்பனால் அச்சம்
20-Dec-2025
ஸ்வரலயா நடன சங்கீத உற்சவம் 21ல் துவக்கம்
20-Dec-2025
வட்டார வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம்
20-Dec-2025
குன்னுார்;குன்னுாரில் முகாமிட்ட காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட திணறி வருகின்றனர்.குன்னுார் நான்சச் பகுதியில் முகாமிட்ட, 8 காட்டு யானைகள் நேற்று முன்தினம் கிளண்டேல் தேயிலை எஸ்டேட்டில் முகாமிட்டது.குன்னுார் ரேஞ்சர் ரவீந்தர் தலைமையில், பாரஸ்டர்கள் ராஜ்குமார், கோபால கிருஷ்ணன், கார்டு திலீப் உட்பட வேட்டை தடுப்பு காவலர்கள் சப்தம் எழுப்பி விரட்டினர்.மீண்டும், நான்சச் பகுதிக்கு செல்லும் என்பதால் ரன்னிமேடு வனப்பகுதிக்குள் விரட்ட நீண்ட நேரம் போராடினர். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர். எனினும், யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் தேயிலை தோட்டத்திலேயே போக்கு காட்டியது.இரவில் மீண்டும் நான்சச் செல்வதை தடுத்தனர். நேற்று காலை மீண்டும் கிளண்டேல் எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்கு வந்தது. அங்கு தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
20-Dec-2025
20-Dec-2025
20-Dec-2025