உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கிளீன் குன்னுார் நிர்வாகிகளுக்கு பரிசு வழங்கிய பணியாளர்கள்

கிளீன் குன்னுார் நிர்வாகிகளுக்கு பரிசு வழங்கிய பணியாளர்கள்

குன்னுார் ; ஓட்டுப்பட்டறை பகுதியில் உள்ள குப்பை மேலாண்மை பூங்காவில் பணியாற்றும் துாய்மை பணியாளர்கள், 'கிளீன் குன்னுார்' அமைப்பு நிர்வாகிகளுக்கு பரிசுகள் வழங்கி அசத்தினர்.குன்னுாரில் சேகரமாகும் குப்பை, ஓட்டுப்பட்டறை பகுதியில் உள்ள குப்பை மேலாண்மை பூங்காவில், 'கிளீன் குன்னுார்' அமைப்பு மற்றும் நகராட்சி சார்பில் பிரித்தெடுக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதன், 5ம் ஆண்டு விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நடந்தது. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கியதுடன் தீபாவளி விருந்து வழங்கப்பட்டது. பொதுவாக, துாய்மை பணியாளர்களுக்கு பலரும் பரிசுகள் வழங்கி வரும் நிலையில், இம்முறை சிறப்பு நிகழ்வாக இங்கு பணியாற்றும் துாய்மை பணியாளர்கள், 'கிளீன் குன்னுார்' அமைப்பு நிர்வாகிகளுக்கு பரிசுகள் வழங்கி அசத்தினர்.தொடர்ந்து நடந்த தீபாவளி விழாவிற்கு அமைப்பு தலைவர் சமந்தா அயனா தலைமை வகித்தார். செயலாளர் வசந்தன் கூறுகையில், ''குப்பைகள் சேகரித்து மறுசுழற்சி செய்து வரும் பணியாளர்கள் அனைவரும் கவுரவிக்கப்பட வேண்டியவர்கள். சிறந்த எண்ணம் கொண்ட இவர்கள் வழங்கிய பரிசு விலை மதிப்பற்றது. கடந்த, 5 ஆண்டுகளில், குன்னுாரில் சேகரமான ஒரு கோடியே, 25 லட்சத்து 88 ஆயிரம் கோடி கிலோ குப்பை சேகரிக்கப்பட்டுள்ளது. 23 லட்சத்து 49 ஆயிரம் கிலோ மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டது. 61 லட்சத்து 46 ஆயிரம் கிலோ உரம் தயாரிக்கப்பட்டுள்ளது. 40 லட்சத்து 93 ஆயிரம் கிலோ குப்பைகள் பாதுகாப்பாக அழிக்கப்பட்டது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ