மேலும் செய்திகள்
புலி தாக்கி விவசாயி பலி; பழங்குடி மக்கள் மறியல்
20 minutes ago
ஆக்கிரமிப்பு விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க மனு
21 hour(s) ago
பொக்காபுரம் கோவிலுக்கு அரிசி கொண்டு செல்லும் நிகழ்ச்சி
21 hour(s) ago
ஊட்டி;ஊட்டியில் இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் சார்பில், 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்க மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், 'பல ஆண்டுகளாக பணி புரிந்து வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது.ஆனால், அந்த வாக்குறுதி இதுவரை அமலுக்கு வரவில்லை. இதனால், இடைநிலை ஆசிரியர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்,' என, கோஷம் எழுப்பப்பட்டது. சங்க மாவட்ட செயலாளர் தண்டபாணி, பொருளாளர் அருண் பிரபு, மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் சித்தராணி உட்பட, இடைநிலை ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.
20 minutes ago
21 hour(s) ago
21 hour(s) ago