உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாலை நேர உழவர் சந்தைகள் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மாலை நேர உழவர் சந்தைகள் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சூலுார்;'மாலை நேர உழவர் சந்தைகள் துவக்கி, அதில் விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்' என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சூலுார் அடுத்த நடுப்பாளையத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சூலுார் தாலுகா ஐந்தாவது மாநாடு நடந்தது. கோவை மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார்.மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற ஒயிலாட்ட மற்றும் கிராமிய பாடல்கள் கலைஞர் பத்திரப்பன் கவுரவிக்கப்பட்டார். விளை நிலங்களை பாழ்படுத்தும் மான், மயில் மற்றும் காட்டுப்பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவற்றுக்கென தனி சரணாலயம் உருவாக்கி அவற்றை பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் நிம்மதியாக விவசாயம் செய்ய முடியும். கள் இறக்க உள்ள தடையை நீக்க வேண்டும். மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்ய வேண்டும். கடன் பெற்ற விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மாலை நேர உழவர் சந்தைகளை துவக்க வேண்டும். அதில், விவசாயிகள், விவசாய குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். வறட்சி, வெள்ளம் பருவநிலை பாதிப்பு உள்ளிட்டவைகளால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு, உரிய இழப்பீட்டை முறையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி