உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாஜி., அ.தி.மு.க., எம்.பி., கடைக்கு சீல்: பணம் செலுத்திய பின் அகற்றம் பணம் செலுத்திய பின் அகற்றம்

மாஜி., அ.தி.மு.க., எம்.பி., கடைக்கு சீல்: பணம் செலுத்திய பின் அகற்றம் பணம் செலுத்திய பின் அகற்றம்

ஊட்டி:நகராட்சிக்கு வாடகை பாக்கி வைத்த மாஜி., எம்.பி., யின் கடைக்கு ' சீல்' வைக்கப்பட்டது. ஒரு மணி நேரத்தில் பணம் செலுத்தப்படதால் ' சீல்' அகற்றப்பட்டது. ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள பாரதியார் காம்ப்ளக்சில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகிறது. வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளை நகராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்து ' சீல்' நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பாரதியார் காம்ப்ளக்சில் இரண்டு கடைகளுக்கு, கடந்த, 2022--24 காலகட்டத்தில், 19 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி இருந்துள்ளது. நகராட்சி கமிஷனர் ஏகராஜ் உத்தரவின் பேரில் நேற்று, நகராட்சி வருவாய் அலுவலர் நாகநாதன், நகராட்சி ஆய்வாளர் திலகம் ஆகியோர் ' சீல்' வைத்தனர் நகராட்சி வருவாய் அலுவலர் நாகநாதன் கூறுகையில், ''மாஜி அ.தி.மு.க., எம்.பி., அர்ஜூணன், அ.தி.மு.க., நிர்வாகி ராஜகோபாலன் ஆகியோர், 19 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்ததால் இரண்டு கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. சீல்' வைத்த ஒரு மணி நேரத்தில் மாஜி., எம்.பி., அர்ஜூணன் இன்று (நேற்று) தேதிக்கு, 4.5 லட்சத்திற்கான காசோலை தந்து, வங்கி மூலம் பணம் பெறப்பட்டதை அடுத்து, ஒரு கடையின் ' சீல்' அகற்றப்பட்டது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை