உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  முட்டைக்கோஸ் அறுவடை செய்வதில் விவசாயிகள் ஆர்வம்

 முட்டைக்கோஸ் அறுவடை செய்வதில் விவசாயிகள் ஆர்வம்

கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில் முட்டைக்கோஸ் அறுவடை செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயம் பிரதானமாக இருந்தாலும், நீர் ஆதாரமுள்ள விளைநிலங்களில் மலை காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இடுபொருட்களின் விலையேற்றம், கூலி உயர்வு, லாரி வாடகை, ஏற்று இறக்கு கூலி மற்றும் மண்டி கமிஷன் உள்ளிட்ட செலவினங்களால், மலை காய்கறி பயிரிட அதிக முதலீடு தேவைப்படுகிறது. இருப்பினும், பொருளாதார நெருக்கடியில், விவசாயிகள் கடன் பெற்று சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். கோத்தகிரி பகுதியில், ஈளாடா, நெடுகுளா, கூக்கல்தொரை மற்றும் கட்டபெட்டு உள்ளிட்ட பகுதிகளில் நடப்பாண்டு, அதிக பரப்பளவில் முட்டைகோஸ் பயிரிடப்பட்டு, விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். தற்போது, ஒரு கிலோ முட்டைக்கோஸ், மேட்டுப்பாளையம் மண்டிகளில், 25 முதல், 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. உள்ளூர் மார்க்கெட்டில், 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை போதுமானதாக இல்லை என்றாலும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், விவசாயிகளுக்கு ஓரளவு ஆறுதலாக உள்ளது. இதனால், தயாரான முட்டைகோஸை ஆர்வத்துடன் அறுவடை செய்யும் விவசாயிகள், மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு விற்பனைக்காக, கொண்டு செல்லும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி