உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

ஊட்டி:ஊட்டியில் வரும், 16ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள கலெக்டர் கூடுதல் அலுவலக வளாகத்தில் வரும், 16ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.விவசாயிகள், விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் இருப்பின், 7ம் தேதிக்குள் (நாளை) தோட்டக்கலை இணை இயக்குனர், தபால் பெட்டி எண்: 72, ஊட்டி - 643001 என்ற அலுவலக முகவரிக்கு, தபாலிலோ, நேரிலோ அல்லது gmail. com என்ற முகவரிக்கு, மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.கூட்டத்தில், கலெக்டர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொள்வதால், விவசாயம் சம்பந்தமான குறைகள் இருப்பின், விவசாயிகள் இக்கூட்டத்தில் தெரிவிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை