ஊட்டி பூண்டு கிலோ ரூ.210; விவசாயிகள் மகிழ்ச்சி
குன்னுார்; மேட்டுப்பாளையம் ஏலத்தில், ஊட்டி பூண்டு விலையில், அதிகபட்சமாக, கிலோவிற்கு, 210 ரூபாய் வரை கிடைத்தது. நீலகிரி மாவட்டத்தில், உருளைகிழங்கு, காரட், பீட்ரூட் உட்பட மலை காய்கறிகள் விவசாயம் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், ஊட்டி, குன்னுார், குந்தா உட்பட பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் பூண்டு விவசாயம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். ஊட்டி போன்ற மேட்டுப்பாளையம் ஏல மையத்தில், வாரந்தோறும் ஞாயிறன்று ஏலம் விடப்படுகிறது. குன்னுார் எடப்பள்ளியில், புதிதாக துவங்கப்பட்ட ஒழுங்குமுறை ஏல சந்தையில் கடந்த வாரம் நடந்த ஏலத்தில் அதிகபட்சமாக கிலோவுக்கு,210 ரூபாய் கிடைத்தது. இந்நிலையில், மேட்டுப்பாளையம் ஏல மையத்தில் நேற்று நடந்த ஏலத்தில் அதிகபட்சமாக, 210 ரூபாய் கிடைத்தது.