ஊட்டி:நீலகிரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், 5 லட்சத்து, 73 ஆயிரத்து 624 பேர் இடம் பெற்றுள்ளனர்.ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் கலெக்டர் அருணா இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டார்.அதன்படி, 'ஊட்டி தொகுதி, 92 ஆயிரத்து 813 ஆண்கள், 1 லட்சத்து 1431 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், 12 பேர்,' என, மொத்தம், 1 லட்சத்து 94 ஆயிரத்து 256 வாக்காளர்கள் உள்ளனர்.'கூடலுார் தொகுதியில், 92 ஆயிரத்து 892 ஆண்கள், 98 ஆயிரத்து 718 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 4 பேர்,' என, மொத்தம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 614 வாக்காளர்கள் உள்ளனர்.'குன்னுார் தொகுதியில், '88 ஆயிரத்து 792 ஆண்கள், 98 ஆயிரத்து 958 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், 4 பேர்,' என, 1 லட்சத்து 87 ஆயிரத்து 754 வாக்காளர்கள் உள்ளனர்.மூன்று தொகுதிகளில், 5 லட்சத்து 73 ஆயிரத்து 624 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த, அக்., 27ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் படி, தற்போது வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், 2,992 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் படி, ஆண்களை விட, 24, ஆயிரத்து 610 பெண் வாக்காளர்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.கலெக்டர் அருணா கூறுகையில், ''பொதுமக்கள், ஆர்.டி.ஓ., தாசில்தார், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களிடம் இறுதி வாக்காளர் பட்டியலை பார்வையிடலாம். திருத்தங்கள் இருப்பின், வேலை நாட்கள், இணையதளம் மூலமாக உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியல் தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கு மாவட்ட தகவல் மைய கட்டணமில்லாத தொலைபேசி எண்ணான 0423-1950யை தொடர்பு கொள்ளலாம்,'' என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி உட்பட பலர் பங்கேற்றனர்.