மேலும் செய்திகள்
அறுவை சிகிச்சை அரங்கம் வீணாகி வரும் அவலம்
22-Mar-2025
கூடலுார்; கூடலுார் ஜீன்பூல் தாவரவியல் மையத்தில், செயற்கை ஒளியுடன் மின்மினிப் பூச்சிகள் அரங்கம் அமைத்துள்ளனர்.ஒரு காலத்தில் 'மரங்கள், செடிகளில் இரவில் ஒளிரும் மின்மினிப் பூச்சிகளை பார்ப்பதே பொழுது போக்காக இருந்தது. தற்போதைய நிலையில், மின்மினிப் பூச்சிகளை பார்ப்பது அரிதாகி விட்டது. இன்றைய தலைமுறையினர் மின்மினிப் பூச்சிகளின் அதிசயம், அற்புதத்தை தெரிந்து கொள்ளவும், அவைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், கூடலுார் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.அதன்படி, கூடலுார் ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில் இருட்டறையில், இரவு சூழலில் மின்மினிப் பூச்சிகளை போன்று ஒளிரும் காட்சியை, செயற்கை ஒளி மூலம் உருவாக்கியுள்ளனர்.மேலும், இந்த அறையினுள் செல்பவர்களுக்கு, இரவில் காடுகளில் இருப்பது போன்று உணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒலி அமைப்பும் ஏற்படுத்தி உள்ளனர். பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், தற்போது சோதனை முறையில் இந்த அரங்கம் செயல்பட்டு வருகிறது.வனத்துறையினர் கூறுகையில், 'இரவில், மின்மினிப் பூச்சிகள் ஒளிரும் அற்புதம் குறித்து, இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், செயற்கை முறையிலான மின்மினிப் பூச்சிகள் அரங்கம் அமைக்கப்பட்டு சோதனை முறையில் செயல்பட்டு வருகிறது. மின்மினிப் பூச்சிகளை பாதுகாப்பது, அதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இதன் நோக்கம்,' என்றனர்.
22-Mar-2025