உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அம்பேத்கர் பிறந்த நாள் விழா பந்தலுாரில் மலர் துாவி அஞ்சலி

அம்பேத்கர் பிறந்த நாள் விழா பந்தலுாரில் மலர் துாவி அஞ்சலி

பந்தலுார்; பந்தலுாரில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் அம்பேத்கர், 134 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் இந்திரஜித் தலைமை வகித்தார். நிர்வாகி முருகவேல் முன்னிலை வகித்தார். வக்கீல் சிவசுப்ரமணியம், மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவ்ஷாத், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் எஸ்.சிவசுப்ரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்று அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில், பொதுமக்கள் மற்றும் அம்பேத்கர் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை