மேலும் செய்திகள்
தாவரவியல் பூங்காவில் கொய் மலர் நாற்று வளர்ப்பு
16-Sep-2025
ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில், ஆண்டுதோறும், மே மாதம் மூன்றாவது வாரத்தில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. தவிர, செப்.,15 முதல், நவ.,15ம் வரை இரண்டாவது சீசன் நடக்கிறது. பூங்காவுக்கு வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. தவிர, பூங்கா நர்சரி பாத்திகளில் தயார் செய்யப்பட்ட, மெரி கோல்டு, சாமந்தி, டேலியா உட்பட, மலர் நாற்றுகளை, 5,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர் தொட்டிகளில் நடவு செய்தனர். அதில் தற்போது மலர்கள் பூத்துள்ளன. இவற்றை மாடங்களில் அடுக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிரப்படுத்தி வருகின்றனர். மேலும், பூங்காவில், முதல் முறையாக கொய் மலர்களான 'செல்லோசியா மற்றும் மேத்தோலியா' மலர்களும் வளர்க்கப்பட்டு, சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு காட்சிபடுத்தப்பட உள்ளன.
16-Sep-2025