உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இரவில் யானைகள் வரும் பகுதியில் உலா வருவதை தவிர்க்க வனத்துறை அறிவுரை: போதை ஆசாமிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை

இரவில் யானைகள் வரும் பகுதியில் உலா வருவதை தவிர்க்க வனத்துறை அறிவுரை: போதை ஆசாமிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை

கூடலுார்: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=evcb7tjf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கூடலுாரில் இரவில் காட்டு யானைகள் உலா வரும் பகுதிகளில், மக்கள் தேவை இன்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வனத்துறை அறிவுறுத்தி உள்ளனர். கூடலுார், பந்தலுார் பகுதிகளில் காட்டு யானைகள் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. கடந்த மூன்று மாதத்தில் காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழந்தனர். பிரச்னைக்கு தீர்வு கோரி போராட்டங்கள் நடந்தது. இதை தொடர்ந்து,வனத்துறையினர் இரவு நேரங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். 'இரவு நேரங்களில் யானைகள் உலா வரும் பகுதிகளில், மக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்,' என, அறிவுறுத்தி உள்ளனர். மீறி உலா வரும் நபர்களை எச்சரித்து அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம், இரவு ஓவேலி சூண்டி அருகே, இரவு, 9:00 மணிக்கு, மதுபோதையில் கிராமத்துக்கு செல்லும் சாலையில் படுத்திருந்த நபரிடம் வன ஊழியர்கள், 'யானைகள் ஆபத்து உள்ளதால் அங்கிருந்து செல்ல வேண்டும்,' என, அறிவுறுத்தினர். அதனை ஏற்க மறுத்த அவர், 'யானை தாக்கி நான் இறந்தால் கிடைக்கும், 10 லட்சம் ரூபாயை என் தம்பியிடம் கொடுங்கள்,' என, தெரிவித்தார். அவரின் நிலையை உணர்ந்த வன ஊழியர்கள், அவரை வாகனத்தில் அழைத்து சென்று, சூண்டி பஸ் ஸ்டாண்டில் விட்டு சென்றனர். இதேபோல, மற்றொரு நபரும் வழியில் 'மட்டை'யாகி கிடந்தார். இது போன்ற சூழ்நிலையால், வனத்துறையினர் இரவில் தத்தளித்து வருகின்றனர். வனத்துறையினர் கூறுகையில், 'இரவு நேரங்களில் யானைகள், நடமாட்டம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பை தீவிர படுத்தி வருவதுடன், ஒலிபெருக்கியில் மக்களுக்கு தகவல் தெரிவித்து வருகிறோம். இரவில், அவசர தேவை எனில் எங்களுக்கு தகவல் தெரிவித்தால், உதவ தயாராக உள்ளோம். மக்கள், தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மது அருந்தி வருபவர்கள் முன்னதாக வீடுகளுக்கு செல்ல, அவரின் குடும்பத்தினர் அறிவுறுத்த வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை