உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனத்துறை நடத்தும் சுற்றுலா தலங்கள் திறப்பு: ஸ்பீடு போட் சவாரியில் பணிகள் ஆர்வம்

வனத்துறை நடத்தும் சுற்றுலா தலங்கள் திறப்பு: ஸ்பீடு போட் சவாரியில் பணிகள் ஆர்வம்

ஊட்டி: நீலகிரியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டது. ஊட்டியில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்ததால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டது. மழை சற்று ஓய்ந்ததை அடுத்து, நேற்று முதல், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள லேம்ஸ் ராக், டால்பின் நோஸ், கேத்தரின் நீர் வீழ்ச்சி, கோடநாடு காட்சி முனை, தொட்டபெட்டா சிகரம், பைன் பாரஸ்ட், பைக்காரா நீர் வீழ்ச்சி, அவலாஞ்சி சூழல் சுற்றுலா திறக்கப்பட்டது.மேற்கண்ட சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணியரின் வருகை கணிசமாக அதிகரித்து காணப்பட்டது. பராமரிப்பு பணிகள் நடக்கும், 8 மற்றும் 9 வது மைல் பைன் பாரஸ்ட், கேர்ன்ஹில் ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊட்டி சுற்றுப்புற பகுதிகளில் மழை குறைந்த நிலையில், பைக்காரா ஏரியில் படகு சவாரி செய்ய, சுற்றுலா பயணியர் வந்திருந்தனர். அவர்கள் ஸ்பீடு போட்டில் சவாரி செய்ய ஆர்வம் காட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ