உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  அழுகிய நிலையில் சிறுத்தை உடல் : எரியூட்டிய வனத்துறையினர்

 அழுகிய நிலையில் சிறுத்தை உடல் : எரியூட்டிய வனத்துறையினர்

கோத்தகிரி: கோத்தகிரி அருகே இறந்து கிடந்த சிறுத்தையின் உடலை வனத்துறையினர் எரித்தனர். நீலகிரி வனக்கோட்டம், கட்டபெட்டு வன சரகம் வன உழியர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோத்தகிரி உயிலட்டி அருகே, பரலோரை மலை சரிவில், வருவாய் துறைக்கு சொந்தமான நிலத்தில் துர்நாற்றம் வீசி உள்ளது. ஆய்வில், புதரில் சிறுத்தை உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது. நீலகிரி வன கோட்டம் உதவி வன பாதுகாவலர் மணிமாறன், கட்டபெட்டு வனச்சரகர் சீனிவாசன், வனவர்கள் பிரகாஷ், வினோத்குமார் வனக்காப்பாளர் காமராஜ் மற்றும் 'கீ ஸ்டோன் பவுண்டேஷன்' தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ராஜ்கிரண் ஆகியோர் முன்னிலையில், கக்குச்சி உதவி கால்நடை மருத்துவர் ரேவதி மற்றும் கோத்தகிரி உதவி கால்நடை மருத்துவர் பவித்ரா ஆகியோர்களால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பிறகு அதே இடத்தில் சிறுத்தை உடல் எரிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை