மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி:ஊட்டி போலீஸ் ஸ்டேஷனில் நள்ளிரவில் விசிட் செய்த கரடி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.ஊட்டி ஜி 1 போலீஸ் ஸ்டேஷனை சுற்றி ஹோட்டல்கள் வணிக நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவு கரடி ஒன்று போலீஸ் ஸ்டேஷன் வளாகத்திலும் சாலையிலும் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.உணவு கழிவுகளை தேடி சமீப காலமாக கரடிகள் ஊட்டி நகர் பகுதியில் சுற்றித்திரிவது அதிகரித்துள்ளது. தகவல் அறிந்த வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
03-Oct-2025