உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ரயில் பாதையில் உலா வரும் காட்டு யானைகள்: வனத்துறையினர் திணறல்

ரயில் பாதையில் உலா வரும் காட்டு யானைகள்: வனத்துறையினர் திணறல்

குன்னுார்;-குன்னுாரில் ரயில் பாதை வழியாக உலா வரும் காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.குன்னூர் மலைப்பாதை ஓரத்தில் குட்டியுடன் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் நான்சச், கிளண்டேல் உட்பட பல்வேறு இடங்களில் ரேஷன் கடை, பள்ளிகளை இடித்தன. கரும்புகளையும், வாழை மரங்களையும் உட்கொண்டு வந்தன. இந்நிலையில், 8 காட்டு யானைகள் நேற்று முன்தினம் இரவு காட்டேரி வழியாக பால்காரன் லைன் பகுதிக்கு வந்து அங்கிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியது. தொடர்ந்து ரயில் பாதை வழியாக, குன்னூர் பஸ் ஸ்டாண்ட் நோக்கி வந்தது. காட்டு யானைகளை வனத்துறையினர் நெருப்பு மூட்டியும், பட்டாசு வெடித்தும் விரட்ட முற்பட்டனர்.எனினும் அதை பொருட்படுத்தாமல் பஸ் ஸ்டாண்ட் அருகில் 100 மீ., தொலைவு வரை வந்து அங்கிருந்து கன்னி மாரியம்மன் கோவில் தெருவிற்குள் நுழைந்தது. அங்கு, குடியிருப்பு அருகே நின்றதால் மக்கள் அச்சமடைந்தனர். இரவு பகலாக கண்காணித்து வரும் வனத்துறையினர் விரட்டிய போதும் அங்கிருந்து நகரவில்லை.நேற்று அதிகாலை மீண்டும் அருகில் உள்ள புதர் செடிகளுக்குள் தஞ்சம் அடைந்தன.மீண்டும் நகருக்குள் வரும் என்பதால் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ