| ADDED : மார் 15, 2024 11:10 PM
குன்னுார்;குன்னுார் பாரஸ்ட்டேல் வனப்பகுதியில், 4 நாட்களாகியும் வனத்தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.குன்னுார் பாரஸ்ட்டேல் பகுதியில் கடந்த, 4 நாட்களாக பற்றி எரியும் வனத்தீயை கட்டுப்பபடுத்தும் பணியில் வனத்துறையினர்; தீயணைப்பு துறையினர்; தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.எனினும் கட்டுக்கடங்காமல் தீ பரவி கடும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் 'டிரோன்' இயக்கி பார்வையிட்டனர். டி.எப்.ஓ., கவுதம் கூறுகையில், '' தீயை கட்டுப்படுத்த, 50 பேர் பணியாற்றி வரும் நிலையில் மற்ற நேற்று, 100 பேர் வரவழைத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். எனினும் கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஹெலிகாப்டர் மூலம் அணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 20 ஏக்கருக்கும் மேல் பரப்பளவில் உள்ள வனங்கள எரிந்துள்ளது. வன விலங்குகள் இடம் பெய்ந்துள்ளது. அப்பகுதியில் மேலும் தீ பரவாமல் இருக்கு தீ தடுப்பு கோடு அமைக்கப்படும்,'' என்றார்.
தீயை அணைப்பதில் சிரமம்
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில்,'நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டம் அருகில் தீ வைக்கப்படுவது வனப்பகுதிக்கு பரவுகிறது. தற்போது பாரஸ்ட் டேல் பகுதியில் தீயை அணைக்கும் போதும், காற்றின் வேகம் அதிகரித்து, எழும் புகைமூட்டத்தாலும் அணைப்பதில் சிரமம் உள்ளது. கடந்த, 3 நாட்களை விட நேற்று தீயின் தாக்கம் அதிகரித்துள்ளது,' என்றனர்.