உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு

போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு

ஊட்டி;ஊட்டியில் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுகள், இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பிங்கர் போஸ்டில் உள்ள, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் மையத்தில் நடக்கிறது.அதில், காலை, 10:30 மணிமுதல், 1:30 மணிவரை நடந்து வருகிறது. தேர்வுக்கான புத்தகங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்ட நுாலகத்தில் உள்ளன. பயிற்சி வகுப்புகள், 'ஸ்மார்ட் போர்ட்' வசதியுடன் கூடிய, வகுப்பறையில் சிறந்த வல்லுனர்கள் மூலம், இலவச பாடக் குறிப்புகளுடன், மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது.நீலகிரியை சேர்ந்த பட்ட படிப்பை முடித்த தகுதியானவர்கள், இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறலாம். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், 8056358107; 7200019666 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ