உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இலவச மருத்துவ முகாம்: 178 பேர் பயன்

இலவச மருத்துவ முகாம்: 178 பேர் பயன்

கூடலுார்:கூடலுாரில் நடந்த இலவச மருத்துவ முகாமில், 178 பேர் பயனடைந்தனர்.கூடலுார் புனித தாமஸ் பள்ளியில், ரோட்டரி கிளப் கூடலுார் பூளு மவுண்டன், கோவை கொங்குநாடு மருத்துவமனை சார்பில், இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு ரோட்டரி கிளப் தலைவர் எல்டோ தாமஸ் தலைமை வகித்தார்.ஆர்.டி.ஓ., முகமது குதரத்துல்லா, நகராட்சி தலைவர் பரிமளா ஆகியோர் துவக்கி வைத்தனர்.தொடர்ந்து, டாக்டர்கள் ரமேஷ், ரோகித் கிருஷ்ணா, லட்சுமி, கீர்த்திவாசன் தலையிலான மருத்துவ குழுவினர் நோயாளிகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். முகாமில், 178 பேர் பங்கேற்று பயன் பெற்றனர்.கூடலுார் நகராட்சி துணைத்தலைவர் சிவராஜ், அரசு கல்லுாரி விரிவுரையாளர் மகேஸ்வரன், நகராட்சி கவுன்சிலர்கள் வர்கீஸ், ஆபிதா, தனலட்சுமி, சகுந்தலா, மருத்துவமனை பொது மேலாளர் புருனோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை