உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  இலவச கால்நடை மருத்துவ முகாம்: சங்க உறுப்பினர்களுக்கு ஊக்க பரிசு

 இலவச கால்நடை மருத்துவ முகாம்: சங்க உறுப்பினர்களுக்கு ஊக்க பரிசு

ஊட்டி: நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில், மசினகுடி கிராமத்தில் சரக துணைப்பதிவாளர் அஜீத்குமார் தலைமையில், நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குனர் அய்யனார் முன்னிலையில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. முகாமில், ஆவின் கால்நடை மருத்துவர்கள் செல்வகணபதி, டேவிட் மோகன் உள்ளிட்ட கால்நடை குழுவினர் கால்நடைகளுக்கு பூச்சி மருந்து, குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், மலட்டுத்தன்மை நீக்குதல் போன்ற சிகிச்சைகள் அளித்தனர். மேலும், இம்முகாமில் கால்நடைகளுக்கு இலவசமாக தாது உப்பு கலவைகள் வழங்கப்பட்டன. சிறந்த கால்நடைகள் மற்றும் கால்நடை பராமரிப்பாளர்களுக்கும், சங்கத்துக்கு அதிகப்படியாக பால் வழங்கிய உறுப்பினர்களுக்கும் சிறப்பு பரிசுகளும் வருகை தந்த பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்க பரிசுகளும் வழங்கப்பட்டன. முகாமில், ஆவின் பொது மேலாளர் ராஜேஷ் குமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் கவுரிசங்கர், கூட்டுறவு சார்பதிவாளர்கள் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி