உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  பெண்களுக்கு இலவச தொழில் பயிற்சி

 பெண்களுக்கு இலவச தொழில் பயிற்சி

பந்தலுார்: பந்தலுாரில் உள்ள கிராமப்புற பெண்களுக்கு, இலவச தொழிற்பயிற்சி வழங்கப்பட்டது. தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், திறனுடன் கூடிய தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி, கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் துவக்க நிகழ்ச்சியில், சக்தி நீலகிரி அறக்கட்டளை நிர்வாகி முரளி வரவேற்றார். நிர்வாகி சுரேஷ் தலைமை வகித்து பேசினார். பயிற்சியாளர்கள் பேபி ரீட்டா, செல்வகுமாரி, மோகன் ஆகியோர், பினாயில், சோப்பு, சேம்பு, சோப்பு பவுடர், ஹேண்ட்வாஷ் தயாரிப்பு குறித்த செயல்முறை பயிற்சி அளித்தனர். மேலும், தொழில் முனைவோர் கடன் பெற்று, சுய தொழில் செய்வதற்கான கடன் பெறுவது குறித்து மாவட்ட தொழில் மைய அலுவலர், கோபால்சாமி விளக்கி பேசினார். ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் ரவிச்சந்திரன், கலைச்செல்வன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை