உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு மேல்நிலை பள்ளியில் பெண் குழந்தைகள் தின பேரணி

அரசு மேல்நிலை பள்ளியில் பெண் குழந்தைகள் தின பேரணி

கோத்தகிரி : தும்மனட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை ஒட்டி, விழிப்புணர்வு பேரணி நடந்தது.ஆண்டுதோறும் ஜன., 24ம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அதில், பெண் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், குழந்தை திருமணம், பணிபளு, பாலின சம்பவங்கள், கல்வியில் இடர்பாடு, குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், சந்திக்க வேண்டிய சவால்கள், பெண் குழந்தைகளுக்காக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஊட்டி தும்மனட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை மற்றும் ஊட்டி சரக போலீசார் சார்பில், தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் பேரணி நடந்தது.தலைமை ஆசிரியர் கணேஷ் தலைமை வகித்தார். தும்மனட்டி அரசு மேல்நிலை பள்ளி மற்றும் ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் பதாகைகளுடன், கோஷங்கள் எழுப்பி, பேரணியில் பங்கேற்றனர்.பள்ளியில் துவங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் பள்ளியை அடைந்தது. மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரம்யா, ஊட்டி ரூரல் இன்ஸ்பெக்டர் மணிகுமார் எஸ்.ஐ., லட்சுமி, ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் நவநீதகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.இதற்கான ஏற்பாடுகளை, தும்மனட்டி பள்ளி தலைமையாசிரியர் கணேஷ் தலைமையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை