உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையில் உலா வரும் ஆடுகள்; போக்குவரத்துக்கு இடையூறு

சாலையில் உலா வரும் ஆடுகள்; போக்குவரத்துக்கு இடையூறு

கோத்தகிரி; கோத்தகிரி பஸ் நிலையம் சாலையில் உலா வரும் ஆடுகளால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில், அரசு பஸ்கள் உட்பட, தனியார் வாகனங்களின் இயக்கம் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. நகர சாலையில், நாய்கள் மற்றும் கால்நடை நடமாட்டம் அதிகரித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் சென்று வரும்போது, ஆடுகள் அங்கும் இங்கும் ஓடுவதால், விபத்து அபாயமும் உள்ளது. எ னவே, கோத்தகிரி நகராட்சி நிர்வாகம், ஆடுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், உரிமையா ளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ