உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மான்கள் மீது மோதாமல் தவிர்க்க முயன்ற போது அரசு பஸ் விபத்து

மான்கள் மீது மோதாமல் தவிர்க்க முயன்ற போது அரசு பஸ் விபத்து

கூடலுார்; முதுமலை--மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், மான்கள் மீது மோதாமல் தவிர்க்க, முயன்ற போது, அரசு பஸ் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. கூடலுாரில் இருந்து, கர்நாடக மாநிலம் மைசூருக்கு நாள்தோறும் காலை, 7:30 மணிக்கு, தமிழக அரசு பஸ் இயக்கப்படுகிறது. வழக்கம் போல நேற்று காலை இந்த பஸ், 22 பயணிகளுடன், கூடலுாரில் இருந்து புறப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை வழியாக, மைசூரு நோக்கி சென்றது. பஸ்சை ஓட்டுனர் நவீன் ஓட்டி சென்றார். காலை, 7:45 மணிக்கு, தொரப்பள்ளி வன சோதனை சாவடியை கடந்து, முதுமலை புலிகள் காப்பகம் வழியாக சென்றது. அப்போது, மான் கூட்டங்கள் திடீரென சாலையை கடந்தது. மானின் மீது பஸ்சை மோதாமல் இருக்க ஓட்டுனர் திடீரென பஸ் திருப்பிய போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் மரத்தில் மோதி நின்றது. இதில், பஸ் கண்ணாடி சேதமடைந்தது. பஸ் ஓட்டுனர், நடத்துனர் மற்றும் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். அங்கிருந்து, பயணிகள் உதவியுடன், பஸ் மீட்கப்பட முயன்ற போது, பஸ் சாலையின் குறுக்கே நின்றது. இதனால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, வாகன ஓட்டுனர்கள், பயணிகள் உதவியுடன், சாலை குறுக்கே நிறுத்தப்பட்ட பஸ் நகர்த்தப்பட்டு சாலையோரம் நிறுத்தப்பட்டது. காலை, 10:00 மணிக்கு வாகன போக்குவரத்து சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை