உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு பஸ் ஜன்னல் கண்ணாடிக்கு கயிறு கட்டி பாதுகாப்பு

அரசு பஸ் ஜன்னல் கண்ணாடிக்கு கயிறு கட்டி பாதுகாப்பு

குன்னுார்; ஊட்டியில் இருந்து சமவெளி பகுதிகளுக்கு இயக்கப்படும், 'எக்ஸ்பிரஸ்' அரசு பஸ் ஜன்னல் கண்ணாடி பாதுகாப்புக்கு கயிறு கட்டி வைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள் பெரும்பாலும் பழைய பஸ்களாக உள்ளன. சமவெளிகளில் ஓடி தேய்ந்து போன பஸ்கள் பழுதடைந்த நிலையில், இயக்கப்படுவதால் பயணிகள் அச்சத்துடன் பயணம் மேற்கொள்கின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் ஊட்டியில் இருந்து குன்னுார் வழியாக சமவெளி பகுதிக்கு இயக்கப்பட்ட, 'டி.என்.38 -என்-:3134' என்ற எண் கொண்ட 'எக்ஸ்பிரஸ்' அரசு பஸ், கண்டக்டர் அமரும் கடைசி இருக்கையின் ஜன்னல் கண்ணாடிக்கு கயிறு கட்டி பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அருவங்காடு பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கிருஷ்ணசாமி கூறுகையில்,''மலைப்பகுதியில் பாதுகாப்பான புதிய பஸ்களை இயக்க வேண்டிய அரசு, பழுதடைந்த இது போன்ற பஸ்களை இயக்குவதால் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே புதிய அரசு பஸ்களை இயக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ