உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலைப்பாதை விபத்தில் தப்பிய அரசு விரைவு பஸ்

மலைப்பாதை விபத்தில் தப்பிய அரசு விரைவு பஸ்

குன்னுார் ; குன்னுார் காட்டேரி அருகே அரசு விரைவு பஸ் விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.ஊட்டியில் இருந்து நேற்று முன்தினம் மாலை மார்த்தாண்டத்திற்கு, 25 பயணிகளுடன், அரசு விரைவு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது, காட்டேரி அருகே குன்னுாரை நோக்கி வந்து கொண்டிருந்த, வாகனத்தை, 'பிக்- அப்' வாகனம் ஓவர்டேக் செய்தது.அப்போது, எதிர்பாராத விதமாக, 'பிக் அப்' மீது பஸ் மோதாமல் இருக்க, இடது புறமாக இருந்த மண் திட்டு மீது பஸ்சை ஏற்றி டிரைவர் அருண்குமார் நிறுத்தியுள்ளார். அதே இடத்தில் இருந்த மின்கம்பம் மீது மோதாமலும், பள்ளத்தில் கவிழாமலும் பஸ் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.மாற்று அரசு விரைவு பஸ்சில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டத்துடன், கிரேன் வரவழைத்து அரசு பஸ்சை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ