மேலும் செய்திகள்
அடுத்தடுத்து இறந்த கால்நடைகளால் அதிர்ச்சி
20 hour(s) ago
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
20 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
20 hour(s) ago
கூடலுார்:கூடலுார் ஓவேலி செக் ஷன்-17 நிலம்; குடியிருப்பு பகுதிகளில் அரசு அமைத்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.கூடலுார் பகுதியில் செக்ஷன்-17 நில பிரச்னைக்கு தீர்வு காண மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாக, அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதன் ஒரு பகுதியாக, வருவாய் துறை சார்பில், ஓவேலியில் செக்ஷன்-17 நில பகுதியை 'சர்வே' செய்ததுடன், அங்குள்ள வீடுகளுக்கான மின் இணைப்பு, வீட்டு வரி செலுத்தியதன் விபரங்களையும் சேகரித்தனர்.அதன் அடிப்படையில, 'வனவிலங்குகள் அதிகமாக மக்கள் குறைவாக வாழும் பகுதி; மக்களும், வனவிலங்குகளும் வாழும் பகுதி; மக்கள் வாழும் குடியிருப்பு பகுதி,' என, மூன்றாக வகைப்படுத்தி உள்ளனர். இதன் விபரங்களை, அரசுக்கு அறிக்கையாக சமர்பித்துள்ளனர்.இந்நிலையில், ஓவேலி செக்ஷன்- 17 நிலம்; மற்றும் குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்வதற்காக, தமிழக அரசு, வனத்துறை முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுதன்ஷுகுப்தாவை தலைவராகவும், முதன்மை தலைமை வன பாதுகாவலர் (புலிகள் திட்டம்) ராகேஷ் குமார் டோக்ராவை உறுப்பினராகவும் கொண்ட குழு அமைத்துள்ளனர்.இக்குழுவினர், நேற்று கூடலுார் ஓவேலி சந்தமலை, நாயன்பாடி பழங்குடி கிராமம், நீயூஹோப் தனியார் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு, காமராஜ் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதிகாரிகள் கூறுகையில், 'குழுவினர் ஆய்வு அறிக்கை விபரத்தை அரசிடம் சமர்பிக்க உள்ளனர்; அதன் பின்பு உரிய விபரம் தெரியவரும்,' என்றனர். நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா, கூடலுார் டி.எப்.ஓ., கொம்மு ஓம்காரம், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்திபிரியதர்ஷினி, கூடலுார் ஆர்.டி.ஓ., செந்தில்குமார், உதவி வன பாதுகாவலர் கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago