பசுமை தின நிகழ்ச்சி
கோத்தகிரி : கோத்தகிரி கடைக்கம்பட்டி கிராமத்தில், நீலகிரி வன கோட்டம், கட்டபெட்டு வனச்சரகம் சார்பில், சோலை மரக்கன்று நடவு செய்யப்பட்டது.கட்டபெட்டு ரேஞ்சர் செல்வகுமார் தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நாக்கு பெட்டா நலச்சங்க பொருளாளர் போஜன், 'நெஸ்ட்' அறக்கட்டளை நிர்வாகி ராம்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம பொது இடங்களில், நாவல், கோலி, விக்கி, செண்பகம் மற்றும் கிளிஞ்சி உள்ளிட்ட, 100 சோலை மரங்கள் நடவு செய்யப்பட்டன. நிகழ்ச்சியில், உள்ளூர் விவசாயிகள், பெண்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று மரக்கன்று நடவு செய்தனர்.