மேலும் செய்திகள்
பராமரிப்பில்லாத நகராட்சி லாரி கண்டு கொள்ளாத நிர்வாகம்
5 hour(s) ago
ரூ.2.66 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
5 hour(s) ago
ரூ.1.25 கோடியில்புதிய நுாலக கட்டடம்
5 hour(s) ago
மஞ்சூர்;மஞ்சூர் தேயிலை தோட்டங்களில் உலாவரும் காட்டெருமைகளால், தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினமும் தோட்டங்களில் அறுவடைக்கு தயாரான இலைகளை பறிக்க ஏராளமான பெண் தொழிலாளர்கள் தோட்டங்களுக்கு செல்கின்றனர். வனத்திலிருந்து வெளியேறும் காட்டெருமைகள் உணவு தேடி தேயிலை தோட்டங்களில் உலா வருவது அதிகரித்துள்ளது. தோட்டங்களில் புகுந்து அச்சுறுத்தி வரும் காட்டெருமைகள் அவ்வப்போது பெண் தொழிலாளர்களை தாக்கி வருவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளான கீழ்குந்தா, மட்டக்கண்டி, பாக்கோரை, தூனேரி, கொட்டரக் கண்டி, உள்ளிட்ட பகுதி தேயிலை தோட்டங்களில் சமீபகாலமாக காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக உலா வருகிறது. இதனால், பெண் தொழிலாளர்கள் இலை பறிக்க தேயிலை தோட்டவேலைக்கு செல்ல மறுப்பதால் வேலையின்றி பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். தொழிலாளர் கூறுகையில், 'மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக தேயிலை தோட்டங்களில் காட்டெருமை கூட்டமாக சுற்றித் திரிவது அதிகரித்துள்ளது. வேலைக்கு செல்ல தொழிலாளர்கள் அச்சமடைந்திருப்பதுடன், வேலையிழப்பால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் வனத்திற்கு விரட்டி கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்,' என்றனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago