உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம்

இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம்

ஊட்டி;ஊட்டி காந்தள் அருள்மிகு காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில், இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.மாவட்டத் தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். கூட்டத்தில், 'வரும் 22ம் தேதி அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, அன்றையதினம் பகல், 12:00 மணி முதல், 700 கோவில்களில் ஸ்ரீ ராம நாமம் முழங்கி, சிறப்பு வழிபாடு நடத்துவது;வரும், 26ம் தேதி புளியம்பட்டியில் நடைபெறும் இந்து முன்னணி கோவை கோட்ட மாநாட்டிற்கு, நீலகிரி மாவட்டத்தில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது,' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், இந்துமுன்னணி மாவட்ட, நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை