வீடுகளில் தீப வழிபாடு: ஹிந்து முன்னணி தீர்மானம்
கூடலூர்: -திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் நாளில், கூடலூரில் அனைத்து ஹிந்துக்கள் வீடுகளிலும் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த, ஹிந்து முன்னணி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூடலூர், சாஸ்தாபுரி அரங்கில் நகர ஒன்றிய, பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். தென் பாரத் அமைப்பாளர் பக்தன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், 'அனைத்து கிளைகளிலும் வேல் வழிபாடு நடத்த வேண்டும். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் நாளான டிச., 25ல் கூடலூரில் அனைத்து இந்துக்கள் வீடுகளிலும் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த வேண்டும்' உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட செயலாளர் தினேஷ், நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.