உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வளையப்பந்து போட்டி; அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

வளையப்பந்து போட்டி; அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

கோத்தகிரி; கோத்தகிரி தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மாவட்ட அளவில் வளையப்பந்து போட்டியில், 19, 17 மற்றும் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் சாதித்து, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். மேலும், 19 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவியரும் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவிலும் மாவட்ட அளவில் வெற்றி பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். தவிர, 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் கேரம் போட்டியில், ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவிலும் வெற்றி பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். சாதித்த மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ் தலைமை வகித்தார். பள்ளி பி.டி.ஏ., தலைவர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர் சங்க தலைவர் சேகர், பொருளாளர் போஜன் மற்றும் பி.டி.ஏ., அங்கத்தினர்கள் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஷீபா ராணி, ராகேஷ் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து, சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ