மேலும் செய்திகள்
மண் சரிந்து இருவர் பலி
18-Sep-2025
குன்னுார்: குன்னுாரில் நேற்று முன்தினம் பெய்த கனமழையில், ஊட்டி குன்னுார் சாலை பாலவாசி அருகே மண் சரிவு ஏற்பட்டது. தகவலின் பேரில், தேசிய நெடுஞ்சாலை துறையினர், போலீசார் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். மண் சரிவு காரணமாக வீடுகள் அந்தரத்தில் உள்ளன. இதனால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர். மக்கள் கூறுகையில்,'கடந்த சில நாட்களாக குன்னுார் பகுதியில் இரவில் மழை பெய்து வருவதால், எங்கள் பகுதி அபாய நிலையில் உள்ளதால் உறக்கம் கூட வருவதில்லை. தற்போது மண்சரிவு ஏற்பட்டதால், மேலும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
18-Sep-2025