மேலும் செய்திகள்
நல் நுாலகர் விருது
13-Dec-2025
வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை
13-Dec-2025
அணைகள் நீர்மட்டம்
13-Dec-2025
ஊட்டி:நீலகிரி லோக்சபா தொகுதியில் பயன்படுத்த உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் 'பேலட் ஷீட்' பொருத்தும் பணி நடந்து வருகிறது.நீலகிரி லோக்சபா தொகுதி, 'ஊட்டி, குன்னுார், கூடலுார், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர்' ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது. நீலகிரி லோக்சபா தொகுதியில், 1,619 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இம்முறை, 16 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு ஓட்டுசாவடியிலும், இரண்டு மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.இதற்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வி.வி., பேட் இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட்கள் அந்தந்த சட்டசபை தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு 'ஸ்ட்ராங் ரூமில்' வைக்கப்பட்டுள்ளன. பொருத்தும் பணி துரிதம்
நீலகிரியில் உள்ள மூன்று தொகுதிகளுக்கு, 689 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்; சமவெளி பகுதியில் உள்ள மூன்று தொகுதிகளுக்கு, 930 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம் மற்றும் சின்னத்துடன் கூடிய ' பேலட் ஷீட்' பொருத்தப்படுகிறது.இப்பணிகள் அந்தந்த சட்ட சபை தொகுதியில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் அரசியல் கட்சிகளில் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று முன்தினம் துவங்கியது. ஊட்டி பிரீக்ஸ் பள்ளியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மகாராஜ் தலைமையில நடந்தது. அதேபோல், அந்தந்த சட்டசபையில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் பேலட் ஷீட் பொருத்தும் பணி நடந்தது. 'பார்கோடு' ஸ்கேன்
முதலில் இருப்பு அறையிலிருந்து மின்னணு இயந்திரங்கள் ஒவ்வொன்றாக எடுக்கப்பட்டு, அதிலிருந்து பார்கோடு ஸ்கேன் செய்யப்பட்டது. அதில், கம்ப்யூட்டர் முறையில் குலுக்கல் நடத்திய போது ஒதுக்கப்பட்ட ஓட்டுசாவடி எண் மற்றும் பள்ளி கட்டடம் போன்ற விபரங்கள் தெரிந்தது. அந்த தகவல் பிரிண்ட் செய்யப்பட்டு இயந்திரத்தில் ஒட்டப்பட்டது. அதன் பின், 'பேலட் ஷீட்' ஒட்டப்பட்டது.தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் மகாராஜ் கூறுகையில்,''பேலட் ஷீட் பொருத்தும் பணி அந்தந்த சட்டசபையில் நடந்து வருகிறது. இரண்டு நாட்கள் இப்பணி நடக்கிறது. பயன்படுத்தும் இரண்டு இயந்திரங்களுக்கு இணைப்பு கொடுத்து தலா, 1000 ஓட்டுக்கள் வீதிம் மாதிரி ஓட்டுப்பதிவு செய்து இயந்திரத்தின் செயல்பாடு பரிசோதனை செய்யப்பட உள்ளது,'' என்றார்.
நீலகிரி லோக்சபாவில் உள்ள, ஊட்டி, குன்னுார், கூடலுார், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் ஆகிய ஆறு தொகுதிகளில், மின்னணு ஓட்டுப்பதிவில் பழுது ஏற்படும் பட்சத்தில் ஒரு தொகுதிக்கு, 20 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 'ரிசர்வில்' வைக்கப்படும். தேவைப்படும் போது பயன்படுத்தப்படும்.
13-Dec-2025
13-Dec-2025
13-Dec-2025