மேலும் செய்திகள்
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
3 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
4 hour(s) ago
கருமத்தம்பட்டி : கருமத்தம்பட்டி அருகே ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த, 3 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.சூலுார் சட்டசபை தொகுதியை சேர்ந்த தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு படையினர் சுழற்சி முறையில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் டோல்கேட்டில் பறக்கும் படை அதிகாரி சுரேஷ்குமார் தலைமையிலான குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் அதில், உரிய ஆவணங்கள் இன்றி, 3 லட்சம் ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், காரில் வந்தவர் பீளமேட்டை சேர்ந்த சேர்ந்த சபீர் என்பது தெரிந்தது. பணம் குறித்து கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் சூலுாரில் உள்ள தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
3 hour(s) ago
4 hour(s) ago