உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் லாரி ஸ்டிரைக் எதிரொலி: காய்கறி மார்க்கெட்டில் வரத்து குறைவு

ஊட்டியில் லாரி ஸ்டிரைக் எதிரொலி: காய்கறி மார்க்கெட்டில் வரத்து குறைவு

ஊட்டி;ஊட்டியில் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் செய்ததால், காய்கறி மார்க்கெட்டில் வரத்து குறைந்தது.மத்திய அரசு, புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா கொண்டு வந்துள்ளது. அதன்படி, 'விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி செல்லும் டிரைவர்களுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை அல்லது, ஏழு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த சட்டத்தை கண்டித்தும், கையெழுத்து இல்லாத இணைய தள வழக்கை எதிர்த்தும், கடந்த சில நாட்களாக, தமிழ்நாடு, கர்நாடக, கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை லாரி ஓட்டுனர் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், ஊட்டியில் நேற்று காலை, 6:00 மணி முதல், இன்று காலை, 6:00 மணி வரை, 24 மணிநேர போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு, கேரட் கழுவுபவர்கள் சங்கம், இங்கிலீஷ் காய்கறிகள் வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் ஆதரவு அளித்தன.இதனால், ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 350 லாரிகள் இயங்கவில்லை. இதனால், ஊட்டி மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்தது. ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் உள்ளிட்ட மண்டிகளுக்கு காய்கறிகளை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.ஊட்டி அனைத்து வணிகர் சங்க தலைவர் ராஜா முகமது கூறுகையில், ''ஊட்டி மார்க்கெட்டுக்கு நாள்தோறும், 50 முதல் 60 டன் காய்கறிகள் வரத்து இருக்கும். போராட்டத்திற்கு ஆதரவு அளிக்குமாறு தாமதமாக அறிவிப்பு வந்ததால், நேற்று காலை தோட்டங்களில் அறுவடை செய்த, 15 டன் வரை காய்கறி விற்பனைக்கு வந்து, விற்பனைக்கு அனுப்பப்பட்டது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ