உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / யானை தாக்கி 3 உயிர்கள் பலி: ராகுல் தொகுதியில் கடையடைப்பு

யானை தாக்கி 3 உயிர்கள் பலி: ராகுல் தொகுதியில் கடையடைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பந்தலூர் : தமிழக எல்லையான நீலகிரி மாவட்டம், பந்தலூரை ஒட்டி அமைந்துள்ளது கேரளா வயநாடு. தமிழகத்தின் முதுமலை மற்றும் கர்நாடக பந்திப்பூர் புலிகள் காப்பகம், கேரளா முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் சந்திப்பு பகுதியில் வயநாடு அமைந்துள்ளது. இதனால் நீலகிரி மற்றும் வயநாடு பகுதிகளில், அடிக்கடி மனித- விலங்கு மோதல் ஏற்படுகிறது. இதில் வயநாடு பகுதியில் கடந்த மாதம் 31 ம் தேதி லட்சுமணன், கடந்த 10 ம் தேதி அஜீஸ், யானை தாக்கி உயிரிழந்த நிலையில், நேற்று (16- ம் தேதி) போல் 42 என்பவர் யானை தாக்கியதில் உயிரிழந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=egk00kfp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 தொடரும் வனவிலங்கு தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும், உயிரிழந்த குடும்பங்களுக்கு 50 லட்ச ரூபாய் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 10 ம் தேதி வயநாட்டில் போராட்டம் மற்றும் மறுநாள் கடையடைப்பு நடந்தது. பிரச்சினை தொடர்பாக , கடந்த சில நாட்களுக்கு முன், கேரளா சட்டசபையில் பேசப்பட்டது. மனித- விலங்கு மோதல் குறித்து ராகுல் பேசாததும், நிவாரணம் மற்றும் தடுப்பு பணிகளுக்காக கோரிய 620 கோடி ரூபாயினை மத்திய அரசு வழங்காததற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, உயிரிழந்த போல் உடலுடன் புல்பள்ளி கடைவீதியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வயநாட்டில் வேலை நிறுத்தம் காரணமாக, தமிழக- கேரளா அரசு பஸ்கள் மற்றும் வாகனங்கள் ஏதும் இயக்கப்படவில்லை. சரக்கு லாரிகள் மாநில எல்லை பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sathyam
பிப் 17, 2024 19:42

எங்க இந்த மகா படித்த புத்திசாலி கேரளா மக்கள் திரும்பி வோட்டு போட்டு இவர ஜெயிக்க வைய்ங்க ஒரே க்ஷேமம் தான் உற்பட்ட மாதிரி தான் , அது தான் ரொம்ப படிப்பறிவு உள்ள மாநில மக்கள் அவலம் லட்சணம்


Amar Akbar Antony
பிப் 17, 2024 15:58

இதெல்லாம் நான் கண்டுகொள்ளமாட்டேன். இதுமட்டுமல்ல வங்கத்தில் நடந்த கற்பழிப்பு, வேங்கைவயல், இப்படி என்ன நடந்தாலும் கண்டுகொள்ளமாட்டேன். எல்லாம் இண்டியா கூட்டணி எனக்கு ஐந்தாறு சீட்டு முக்கியம்


A1Suresh
பிப் 17, 2024 14:04

"அன்பு செலுத்துங்கள்", "பிரிவினையை வளர்க்காதீர்கள்" என்று ராஹுல் னாடு முழுக்க யாத்திரை நடத்துகிறார். மாறாக அவருடைய தொகுதி மக்களை விட்டுவிட்டார். "மிருகங்கள் மீது அன்பு செலுத்துங்கள். அவற்றின் வாழ்விடங்களுக்கு இடர்பாடு செய்யாதீர்கள்" என்று யாத்திரை சென்றிருந்தால் இன்று யானைகள் இப்படி செய்திருக்குமா ?


naranam
பிப் 17, 2024 12:38

நேஷனல் ஹெரால்டு ஊழலில் கொள்ளையடித்த பணத்திலிருந்து ராஹூல் இவர்கள் குடும்பதினருக்குக் கொடுக்கலாம்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ