பைந்தமிழ் பாதுகாப்பு இயக்க துவக்க விழா
ஊட்டி: ஊட்டி ஒய்.எம்.சி.ஏ., வளாகத்தில், 'பைந்தமிழ் பாதுகாப்பு இயக்கம்' துவக்க விழா நடந்தது. கவிஞர் துரை அமுதன் தலைமை வகித்தார். விழா குழு கவிஞர்கள் ஆதித்யன் சிவா,சிவராஜ், நெப்போலியன், பிரேம் குமார் மற்றும் இருதய ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை அறிஞர்கள் சங்க கவிஞர்கள் துரை முருகன், மோகன், நாட்டுப்புற பாடகர் மாரியம்மாள் மற்றும் கவி மன்ற தலைவர் துரை ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று,வளர்ப்பது குறித்து பேசினர். விழா நிகழ்ச்சியை, கவிஞர் நீலமலை ஜேபி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில், மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து, வயது முதிர்ந்த தமிழ் கவிஞர்கள் பங்கேற்றனர்.