உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மெகா கீதா ஞான யக்ஞம் துவக்கம்; வரும் 30ம் தேதி வரை நடக்கிறது

மெகா கீதா ஞான யக்ஞம் துவக்கம்; வரும் 30ம் தேதி வரை நடக்கிறது

பாலக்காடு : கேரள மாநிலம், பாலக்காட்டில் சின்மயா மிஷன் சார்பில் நடக்கும், 'மெகா கீதா ஞான யக்ஞம்' நேற்று துவங்கியது.சின்மயா மிஷன், பரமாசார்யா சுவாமி சின்மயானந்தாவின், 108வது பிறந்தாநாளை முன்னிட்டு, கேரள மாநிலம், பாலக்காடு இந்திரா காந்தி முனிசிபல் ஸ்டேடியத்தில், 'சம்ஸ்கார' என்ற பெயரில், 'மெகா கீதா ஞான யக்ஞம்' நேற்று துவங்கியது. மாலை, 5:30 மணிக்கு நடந்த நிகழ்ச்சியை, மாநில கவர்னர் ஆரீப் முகமது கான் துவக்கி வைத்தார்.தொடர்ந்து, சின்மயா மிஷன் உலகளாவிய தலைவர் சுவாமி சொருபானந்தா தலைமையில், பகவத் கீதை 3வது அத்தியாயம் கர்மயோகத்தை அடிப்படையாக கொண்டு, ஆங்கிலத்தில் 7 நாள் கொண்ட கீதா ஞான யக்ஞம் துவங்கியது. தினமும், மாலை 6:00 மணி முதல், இரவு, 7:30 மணி வரை யக்ஞம் நடைபெறும். நாரிசக்தி தினமாக அனுசரிக்கும், இன்று, இரவு 8:00 மணிக்கு, 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் நாராயணீய பாராயணம் நடக்கிறது.அமிர்த ஜீவன தினமான, நாளை தேசிய கொடியை ஏற்றுதல், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினரை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மத நல்லிணக்க தினமான, 27ம் தேதி ஹரிவராசனம் நுாற்றாண்டு விழா, சர்வமத நல்லிணக்க கூட்டம், 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் ஹரிவராசனம், சமுதாய பாராயணம் ஆகியவை நடக்கிறது.வரும், 28ம் தேதி இளைஞர் தினமாகவும், 29ம் தேதி நாட்டுப்புற தினமாகவும், 30ம் தேதி ஆன்மிக தினத்தில் கேரளாவில் உள்ள சந்நியாசி மடங்களின் ஆச்சாரியார்கள் கலந்து கொள்ளும் கூட்டம் மற்றும் சனாதன தர்மம் குறித்த அறிவிப்பும் நடைபெறும்.கீதா ஞான யக்ஞத்தில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு குறும்படம், பேச்சு, குழு நடனம், கட்டுரை, எழுதுதல், ஓவியம், திருவாதிரை நடனப் போட்டிகளும் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி