அதிகரிக்கும் பிளாஸ்டிக் பூக்கள் தடை; தீர்மானத்தை மறந்த நகராட்சி
குன்னுார் : 'குன்னுார் பகுதிகளில் 'பிளாஸ்டிக்' பூக்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.நீலகிரி மாவட்டத்தில் 'பிளாஸ்டிக்' பயன்படுத்த தடை உள்ளது. இதனால், அவ்வப்போது வருவாய் துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, பிளாஸ்டிக் பறிமுதல் செய்து பயன்படுத்துபவர்களிடம் அபராதம் விதித்து வருகின்றனர்.இந்நிலையில், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், திருமண மண்டபங்களில் அலங்காரத்திற்காக பிளாஸ்டிக் பூக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.கடந்த, 2 மாதங்களுக்கு முன்பு தான் பிளாஸ்டிக் பூக்கள் தடை விதிக்க, குன்னுார் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, ஊட்டியிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், நகராட்சி நிர்வாகம் இதனை செயல்படுத்த மறந்து போனதால், இவற்றின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள துணி கடைகளில் பிளாஸ்டிக் பூக்கள் தொங்க விடப்பட்டுள்ளது. இவற்றை தினமும் நகராட்சி அதிகாரிகள் பார்த்தாலும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். எனவே, இப்பகுதிகளை ஆய்வு செய்து, 'பிளாஸ்டிக்' பூக்கள் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.