உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விலையில்லா சைக்கிள்கள் பொருத்தும் பணியில் வேகம்

விலையில்லா சைக்கிள்கள் பொருத்தும் பணியில் வேகம்

பந்தலுார் : பந்தலுார் தாலுகாவுக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், படிக்கும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விலை இல்லாத சைக்கிள் வழங்கப்பட உள்ளது.இதற்காக சைக்கிள்களின் உதிரி பாகங்கள், பந்தலுார் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்திற்கு கொண்டு வந்து இருப்பு வைக்கப்பட்டது.தொடர்ந்து, வட மாநில பணியாளர்கள் மூலம், சைக்கிள்களின் பாகங்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. பணிகள் நிறைவடைந்த பின்னர் ஒவ்வொரு பள்ளிகளுக்கும், சைக்கிள்கள் கொண்டு செல்லப்பட்டு பின்னர் மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்