மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
பந்தலுார்:நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தரமில்லாத தண்ணீர் தொட்டி தொடர்ந்து பாரம் தாக்காமல் இரண்டாக பிளந்து தண்ணீர் வெளியேறியது.பந்தலுார் பஜாரை ஒட்டி நெல்லியாளம் நகராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு நகராட்சி தேவைகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்வதற்காக, அலுவலகத்திற்கு பின் பகுதியில், சிமென்ட் துாண்கள் அமைக்கப்பட்டு, அதன் மேல் பகுதியில் தண்ணீர் டாங்க் வைக்கப்பட்டுள்ளது.தரம் குறைவான தண்ணீர் டாங்க் என்பதால், பாரம் தாங்காமல் பாதிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்து, தண்ணீர் வெளியேறி வந்தது. தற்போது தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், தண்ணீர் வீணாகி வருவது குறித்து, நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.இதனால், தண்ணீர் மட்டுமின்றி, மின் செலவும் அதிகரித்தது. நேற்று காலை முதல் டாங்க் அடிபாகத்தில், விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வந்தது. திடீரென தொட்டி உடைந்து தண்ணீர் முழுமையாக வெளியேறியது.மக்கள் கூறுகையில், 'நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி கூட போதிய தரமில்லாமல் இருந்தால், வார்டு பகுதிகளில் நடக்கும் பணிகளில் தரம் எப்படி இருக்கும்,' என்றனர்.
03-Oct-2025