உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மத்திய அரசின் எண்ணற்ற திட்டங்கள்; கிராமங்களில் பா.ஜ., பிரசாரம்

மத்திய அரசின் எண்ணற்ற திட்டங்கள்; கிராமங்களில் பா.ஜ., பிரசாரம்

மஞ்சூர்;எடக்காடு பகுதி கிராமங்களில் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் நேரில் சென்று பா.ஜ., வினர் தெரிவித்து வருகின்றனர். குந்தா ஒன்றியம் பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம் ஒன்றிய தலைவர் ரமேஷ்ராஜன் பீமன் தலைமையில் எடக்காடு கட்சி அலவலகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட துணை தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, பிரகாஷ், ஓ.பி.சி., மாவட்ட தலைவர் சுரேஷ், அமைப்புச் சாரா பிரிவு மாவட்ட தலைவர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பங்கேற்று பேசினார். பின், பல்லடத்தில் நடைபெறும் 'என் மண் என் மக்கள்' நிறைவு விழாவில், பிரதமர் மோடி கலந்து கொள்ளும் மாநாட்டிற்கு குந்தா ஒன்றியத்திலிருந்து ஆயிரம் பேர் கலந்து கொள்வது; எதிர்வரும் லோக்சபா தேர்தல் பணி; பொறுப்பாளர்களின் பணி, பூத் வலிமைப்படுத்துதல், உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, பா.ஜ., வினர் எடக்காடு சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்று மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் நேரில் எடுத்து கூறினர்.கூட்டத்தில், மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் சரஸ்வதி,ஒன்றிய துணை தலைவர்கள் நேரு,சூர்யதேவன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை