உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பெண் குழந்தைகளுக்கான சர்வதேச அறிவியல் தினம்

பெண் குழந்தைகளுக்கான சர்வதேச அறிவியல் தினம்

கோத்தகிரி;கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளியில் சர்வதேச மகளிர் மற்றும் அறிவியல் தின நிகழ்ச்சி நடந்தது.பள்ளி தாளாளர் தன்ராஜ் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சரோ தன்ராஜ், இயக்குனர் சம்ஜித் மற்றும் துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், மாணவர்கள் குகன் மற்றும் தன்யா ஆகியோர், 'மனித குலத்துக்கு மாற்றத்தை தங்கள் கண்டுபிடிப்புகளின் மூலம் உருவாக்கிய, ஐன்ஸ்டீன், மேரி கியூரி எடிசன் மற்றும் சர்.சி.வி., ராமன் ஆகியோரின் கண்டுபிடிப்புகள், அதன் பயன்கள்,' குறித்து பேசினர்.தொடர்ந்து, உலகில் தலைசிறந்த அறிவியல் அறிஞர்களின் வேடம் அணிந்து மாணவர்கள் மேடையில் காட்சியளித்தனர். அறிவியல் ஆசிரியை ஜான்சி, 'இந்தியாவில் மறைக்கப்பட்ட தலை சிறந்த அறிவியல் அறிஞர்களான மகரிஷி கனட் போன்ற அறிஞர்களின் கண்டுபிடிப்புகள்,' குறித்து விளக்கினார்.தொடர்ந்து, மாணவர்கள் உருவாக்கிய ரோபோக்களை, மாணவர்கள் அனிரூத் மற்றும் சாய் சுருத்திகா ஆகியோர் இயக்கி காண்பித்தனர். மாணவி ஸ்நீத்திகா வரவேற்றார். மாணவன் ஆதவன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ