கம்பத்தில் பைக் மோதி விபத்து இன்டர்வியூ சென்றவர் பலி
குன்னுார்:நீலகிரி மாவட்டம், சேரம்பாடி கோரஞ்சால் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மகன் ஹரிஷ், 22; லேப் டெக்னீசியன் முடித்த இவர், நேற்று கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இன்டர்வியூவிற்காக, விமல், 26, என்பவருடன் பைக்கில் சென்றார். பாய்ஸ் கம்பெனி அருகே, கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலை பள்ளத்தில் இறங்கி எதிரே இருந்த சோலார் மின்கம்பத்தில் மோதியது. பைக்கின் பின்பகுதியில் ஹெல்மெட் இல்லாமல் அமர்ந்திருந்த ஹரிஷ், மின்கம்ப பேட்டரி பாக்சில், தலைமோதி படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, மணிகண்டன் என்பவரின் ஸ்கூட்டியும் சேதமடைந்தது.படுகாயமடைந்த விமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெலிங்டன் போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குன்னுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.