மேலும் செய்திகள்
சேதமான நடைபாதை மக்கள் நடந்து செல்ல சிரமம்
5 minutes ago
பந்தலுார்: பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சியில், கூட்டு குடிநீர் திட்டம் முறையாக செயல்படாத காரணத்தால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சேரங்கோடு ஊராட்சியில் கிராமப்புற மக்களுக்கு, சீரான குடிநீர் வினியோகம் வழங்க வேண்டும் எனும் நோக்கில் கடந்த, 2009 -10ம் நிதி ஆண்டில், 7 கோடி 21 லட்சம் ரூபாய் செலவில், சோலாடி பகுதியில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆரம்ப காலத்தில் மட்டும் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்ட நிலையில், குடிநீர் குழாய்கள் பழுது, பராமரிப்பு பணியில் மெத்தனம் போன்ற காரணங்களால், தற்போது ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே, இந்த திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடிநீர் தேக்க தொட்டியில் முழுமையாக மண் நிறைந்து, குடிநீர் வினியோகம் செய்யும் வாழ்வு பகுதிகளில் தொற்று நோய்களை பரப்பும் கிருமிகள், வாழும் பகுதியாக மாறி உள்ளது. குடிநீர் தேக்கி வைக்கும் தொட்டியை சுற்றிலும் புதர்கள் சூழ்ந்து, தண்ணீர் முழுவதும் குப்பையாக மாறி உள்ளது. மாதந்தோறும் பல லட்ச ரூபாய் செலவு செய்யப்படும், கூட்டுக் குடிநீர் திட்டம் முறையாக செயல்படாத நிலையில், தற்போது நோய் பரப்பும் கூடமாக மாறி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, கோடை காலம் துவங்கி உள்ள நிலையில் குடிநீர் திட்ட பணி குறித்து ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5 minutes ago